அப்பாடா!!! வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு....!!!
Bank employees strike postponed
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24, 25-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அண்மையில் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் 9 வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.), தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் தற்போது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Bank employees strike postponed