ரூ.1,80,00,00,000 கோடி வங்கி கடன் மோசடி! விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்! - Seithipunal
Seithipunal


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.180 கோடி வங்கி கடன் மோசடியில் விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்று விட்டார். அவர் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரை இங்கிலாந்தில் இருந்து நாட்டு கடத்த முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், விஜய் மல்லையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் ரூ.180 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமனில் வெளிவர முடியாத பிரிவில் பிடிவாரண்ட் பிற[பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

இதற்கு முன்பும் வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக பலமுறை பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் ஆடம்பரமான திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bank loan fraud Warrant for Vijay Mallya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->