'இனி அப்டி சொன்னா செருப்பால் அடிப்பேன்' நடிகர் பவன் கல்யாணால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் பவன் கல்யாண். அவர் ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகின்றார். நடிகராகவும் ,அரசியல்வாதியாகவும் விறுவிறுப்பாக இயங்கி வரும் அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பவன் கல்யாண் குறித்து பாஜகவினரிடம் பணம் வாங்கிக் கொண்டு பாஜகவுக்கு 'பி' டீமாக செயல்படுவதற்காகத்தான் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை துவங்கி உள்ளார் என்றும், பாஜக கொடுக்கும் பணத்தில் தான் அவர் கட்சியை நடத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினர்.

இந்த விஷயம் குறித்து அவர் பலமுறை ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தனது கட்சி தலைமை அலுவலகத்தில் பவன் கல்யாண் நிர்வாகிகளிடம் உரையாடினார். நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது மேடையில் பேசிய பவன் கல்யாண், "நான் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு 'பீ' டீமாக இருக்கிறேன் என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இனி இப்படி யாராவது பேசினால் செருப்பால் அடிப்பேன்." என்று தான் போட்டிருந்த செருப்பை கழட்டி மேடையில் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரான சந்திரபாபுவை அவர் சந்தித்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bawan Kalyan warning To YSR Congress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->