பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை: வீடுகளில் புகுந்த மழைநீர்: நள்ளிரவு ஆய்வு செய்த துணை முதல்-மந்திரி! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. 

இதனைத் தொடர்ந்து இரவு 7 மணி முதல் விடிய விடிய பெங்களூர் நகரம் முழுவதும் கனமழை கொட்டியதால் பெங்களூரு சதக்கார நகர், மல்லேஸ்வரம், மைசூர் வங்கி பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பொதுமக்கள் விடிய விடிய கடும் குளிரினால் அவதி அடைந்தனர். 

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியதால் ஸ்ரீராம் பூர், லிங்கர் ஜீபுரா பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். 

பெங்களூரு நகரில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே. சிவகுமார் பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு சென்று ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் செய்து தர வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வெள்ளசேத விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru Heavy rain Deputy Chief Minister inspected midnight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->