என் வாழ்க்கை, உடல் நலனை நாசமாக்கியவருக்கு திரைத்துறையின் ஆதரவா? கொந்தளிக்கும் நடிகை பூனம் கவுர்! - Seithipunal
Seithipunal


நெஞ்சிருக்கும் வரை திரைப்படம் தமிழில் அறிமுகமான நடிகை பூனம் கவுர். பின்னர் உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

மேலும், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை பூனம் கவுர் பின்னர் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை பூனம் கவுர் தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

பிரபல இயக்குநரால் பஞ்சாபி நடிகை ஒருவரின் சினிமா வாழ்க்கை நாசமானது” என்று மறைமுகமாக தெரிவித்த பூனம் கவுர், தற்போது நேரடியாகவே இயக்குனர் த்ரிவிக்ரம் மீது தெலுங்கு நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் அதனது புகார் மீது இதுவரை எந்த விசாரணையோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ள நடிகை பூனம் கவுர், “என் வாழ்க்கை, மகிழ்ச்சி, உடல் நலனை நாசமாக்கியவருக்கு திரைத்துறையின் ஆதரவு தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.  

நடிகை பூனம் கவுரின் இந்த புகார் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு நடிகர் சங்க பொருளாளர் சிவபாலாஜி, “சங்கத்துக்கு இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் இவ்வாறு பதிவிடுவது பயனற்றது” பதில் கொடுப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Poonam Kaur Statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->