பீகாரில் பெரும் சோகம்: குரங்கால் பலியான பள்ளி மாணவி! - Seithipunal
Seithipunal


பீகாரில் படித்துக்கொண்டிருந்த 10 ஆம் வகுப்பு மாணவி குரங்குகளால் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வைசாலி மாவட்டம், பகவான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகர் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி, நேற்று பிற்பகல் வீட்டின் மொட்டை மாடியில் படித்துக்கொண்டிருந்தபோது, குரங்குகள் கூட்டம் ஒன்று அங்கு வந்துள்ளது. 

குரங்குகளைக் கண்டு பயந்த பிரியா, கீழே இறங்க முயன்றபோது குரங்குகள் அவளைத் துரத்தியுள்ளன. 

அப்போது ஒரு குரங்கு பிரியாவைத் தள்ளியதில் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar Monkey kill a school girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->