ட்ரெண்டிங்கில் ' Ghiblify '....!!! எங்கள் நிறுவன ஊழியர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்- CEO - Seithipunal
Seithipunal


ஓபன் AI  நிறுவனத்தின் சாட் ஜிபிடி AI , உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் AI சாப்ட்வேரில் ஒன்று. பைல் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜி. பி.டி.,யை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது.

சமீபத்தில் சாட்ஜிபிடி 'Ghiblify' (ஜிப்லிபை) என்ற புதிய போட்டோ பில்டர் அம்சத்தை இலவசமாக அறிமுகப்படுத்தியது.இதில்  பயனாளர்கள் தங்கள் போட்டோக்களை சாட்ஜிபிடியில் பதிவேற்றி Ghiblify செய்து கேட்டால், ஆட்டோமேட்டிக் காக அனிமேஷன் பாணியில் போட்டோக்களை மாற்றி தரும்.

ஏராளமான இணையவாசிகள் தங்கள் புகைப்படங்களை ஜிப்லிபை செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இது உலகளாவிய ட்ரெண்டிங் ஆனது. தங்களது போட்டோக்களை ஜிப்லி செய்து அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர்.அந்த வகையில் அ.தி.மு.க., பொது செயலர் இ. பி. எஸ். ஜிப்லி டிரெண்டுக்கு மாறினார்.

அவரது சுவாரஸ்ய அரசியல் நிகழ்வுகளை ஜிப்லி செய்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் சாட்ஜிபிடியின் மெயின் சர்வரே ஆட்டம் கண்டது. பலர் ஒரே நேரத்தில் இந்த பில்டரை பயன்படுத்தத் தொடங்கியதால் சாட்ஜிபிடியின் செயல் வேகம் குறைந்து போட்டோக்கள் சரியாக ஜெனரேட் ஆகாமல் நின்றது.

இது குறித்து, சாட்ஜிபிடியின் CEO சாம் ஆல்ட்மேன் வேதனை பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது," ஏராளமானோர் ஜிப்லிபை செய்து வருவதால் சாட்ஜிபிடி சர்வர்கள் ஓவர்லோட் ஆகி விட்டது. எங்கள் நிறுவன ஊழியர்களும் தூக்கமின்றி தவிக்கின்றனர். ஜிப்லிபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள்" என வேண்டுகோள் விடுத்தார்.இதுவும் தற்போது விரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ghiblify trending company employees suffering from sleep deprivation CEO


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->