1500 சட்டங்களை குளிர் கால கூட்டத் தொடரில் நீக்கப்போகும் மத்திய பாஜக அரசு! - Seithipunal
Seithipunal


மேகாலயா மாநிலத்தை இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மேகாலயா சென்றுள்ளார். மேகாலயா தலைநகர் சில்லாங்கில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

அந்த சந்திப்பில் கிரண் ரிஜிஜு பேசியதாவது "வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்த பிராந்தியத்தை செழிப்பு மிக்க பகுதியாக மாற்றி நாட்டை வலிமையாக்குவதே லட்சியமாக பாஜக கொண்டுள்ளது. பொது மக்களின் அன்றாட வாழ்வுக்கு சில பழைய சட்டங்கள் முட்டுக்கட்டையாக உள்ளதாக மத்திய அரசுக்கு கருதுகிறது. 

அரசின் தலையிடும் மிக குறைவாக கொண்டு அமைதியான வாழ்வை மக்கள் வாழ வழி செய்வதே மோடியின் எண்ணமாக உள்ளது. நடைமுறையில் இல்லாத பழைய சட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தற்காலத்தில் பழைய சட்டங்களுக்கு எந்த தேவையும் இல்லாத நிலையில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 1500 சட்டங்களை நீக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கான மசோதாக்கள் தயார் நிலையில் உள்ளது" என அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP government to remove 1500 laws in the winter session


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->