ஆளும் பாரதிய ஜனதா இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து வருகிறது; எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காட்டம்..! - Seithipunal
Seithipunal


'' பாரதிய ஜனதா அரசு இளைஞர்களின் நம்பிக்கையை, அரசுப் பணிக்கான தேர்வுகளில் நடந்த முறைகேடு மூலம் உடைத்து விட்டது,'' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சுமத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; ஏகலைவனைப் போல், இளைஞர்களின் விரல்களை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை பாரதிய ஜனதா அழித்து வருகிறது. 

அரசு பணிகளுக்கு ஆட்களை எடுப்பதில் தோல்வி என்பது மிகப்பெரிய அநீதி என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலில், பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை. அப்படி அறிவிக்கப்பட்டாலும், தேர்வு முறையாக நடத்தவில்லை. அப்படி நடந்த தேர்விற்கு முன்னதாக, வினாத்தாள் எப்படி கசிந்தது? நீதி கேட்டு போராடிய இளைஞர்களின் குரல்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்திர பிரதேசம், மற்றும் பீஹாரில் நடந்த வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

அந்த மாணவர்களை சந்தித்த முதல்வர், உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த போதும் இது நடந்துள்ளது. இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்த பாரதிய ஜனதா அரசு, ஜனநாயக அமைப்பை கொன்று விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவருடைய அறிக்கையில் மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP has broken the trust of the youth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->