#முன்னிலை நிலவரம் :: குஜராத்தில் சரித்திர சாதனை படைக்க போகும் பாஜக..!! ஹிமாச்சல் பிரதேசத்தில் இழுபறி..!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடந்த முடிந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குஜராத்தைப் பொறுத்தவரை தற்பொழுது பாஜக 130 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் 45 இடங்களிலும் ஆம் ஆத்மிக் கட்சி மூன்று இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பாஜக மீண்டும் குஜராத்தில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று ஹிமாச்சல் பிரதேச வாக்கு எண்ணிக்கையில் பாஜக 22 தொகுதிகளிலும் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் முன்னில வகிக்கின்றன. இமாச்சல் பிரதேசத்தில் இரு கட்சிகளுக்கு இடையே மிக சொற்பமான வித்தியாசத்தில் முன்னிலை இருப்பதால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அல்லது கூட்டணி ஆட்சி அமையுமா? என பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக ஹிமாச்சல் பிரதேச தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில் குஜராத்தில் பாஜக 99 தொகுதிகளிலும் காங்கிரஸ் 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோன்று ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக 44 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகவே தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP lead in Gujarat ups and downs in Himachal Pradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->