இது பட்ஜெட்டா? ஒரு மளிகை கடை கடைக்காரரின் பில் - பாஜகவின் சுப்பிரமணியசாமி கடும் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனை அடுத்து மத்திய பாஜக அரசின் 2023-2024ம் நிதி ஆண்டிற்கான கடைசி முழு பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து மத்திய பட்ஜெட் குறித்து உரையாற்றினார்.

இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. அதேபோன்று ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கான உற்சவரம்பு உயர்த்தப்பட்டதோடு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்பட்டது. மேலும் தங்கத்திற்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது.

இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும், பொதுமக்களும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி மத்திய பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டா? இது ஒரு மளிகை கடை கடைக்காரரின் பில்.  ஒரு ஒழுக்கமான பட்ஜெட் குறிக்கோள்கள் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். மத்திய பட்ஜெட்டில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் என்றால் முதலீட்டின் நிலை மற்றும் வருவாய் விகிதத்தை வெளிப்படுத்தவும், முன்னுரிமைகள், பொருளாதார உத்தி, மற்றும் வளங்களை திரட்டுதலை உள்ளடக்கியது" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader Subramaniasamy criticizes Union Budget 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->