சட்டசபையில் ஒய்யாரமாக ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!   - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் உள்ள பக்பசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் ஜதப் லால் நாத். இவர் சட்டசபைக் கூட்டத்தொடரின் போது தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதும், சபாநாயகர் பிஸ்வ பந்து சென் உள்ளிட்டோர் பேசுவதும் மிகத் தெளிவாக கேட்கிறது. 

இந்த வீடியோவை வலைத்தளங்களில் பரப்பியவர்கள், பொதுநலனை கருத்தில் கொண்டு ஆபாச வீடியோக்களை மறைத்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத்  தொடர்ந்து திரிபுரா மாநிலத்தின் பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, "சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், முதல் கட்டமாக ஜதப் லால் நாத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்டும்" என்றும் உறுதியளித்துள்ளார். 

இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளில், கேமரா கண்களில் சிக்கிய பல பாஜக நிர்வாகிகள் தொடர்பான பதிவுகளும், ஜதப் லால் நாத் பதிவுடன் மீண்டும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp MLA watch obscene vedio in tripura assembly meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->