அண்ணாமலைக்கு பா.ஜ.க. இளைஞர் பிரிவின் தேசிய தலைவர் பொறுப்பா?
bjp youth section national leader position to annamalai
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பா.ஜ.க. இளைஞர் பிரிவின் தேசிய தலைவர் பொறுப்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவராக பணியாற்றி வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் .

இதையடுத்து, அண்ணாமலைக்கு மத்தியில் பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றுத் தகவல் வெளியானது. இந்த நிலையில், பா.ஜ.க. இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பா.ஜ.க. யுவமோர்ச்சா பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பா.ஜ.க. யுவமோர்ச்சா தலைவராக கர்நாடக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
bjp youth section national leader position to annamalai