அதிர்ச்சி ! ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பிளேடு! - Seithipunal
Seithipunal


ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப நாட்களாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளில் அருவருக்கத்தக்க பொருட்கள் மற்றும் உயிர் இருந்த பூச்சிகள் இருப்பது வேதனைக்குரியது. சமீபத்தில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் துண்டான விரல், பூரான் ஆகியவைகள் இருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஏர்  இந்தியாவில் ஏஐ 175 விமானத்தில் பெங்களூரில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு மாதுரேஸ் பால் என்ற பத்திரிக்கையாளர் அண்மையில் பயணித்துள்ளார். விமான பயணத்தின் போது அவருக்கு பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வாய்க்குள் உலகப்பொருள் ஒன்று உறுத்தியுள்ளது.

உலக துண்டு தொண்டைக்குள் நழுவும் முன் சுதாரித்து அதனை பரிசோதித்த போது அந்த உலோகப் பொருள் பிளேடு ரகத்தை சேர்ந்தது என தெரிய வந்ததில் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக அந்த பிளேடு போன்ற பொருளினால் எனது வாய்க்குள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுவே ஒரு குழந்தையாக இருப்பேன் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்? என்று தனது அதிர்ச்சி அனுபவத்தை பதிவிட்டதோடு அவை தொடர்புடைய படங்களை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி இருக்கிறார் மாதுரேஸ் பால்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Blade of food served on Air India flight


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->