பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு; ஓட்டம் பிடித்த மாணவர்கள்!
Bomb blast on university campus; Runaway students!
பாட்னா பல்கலைக்கழகத்தில்வளாகத்தில்நடந்தகுண்டுவெடிப்பு,ஒழுங்கீனத்துடன் நடந்து கொள்ளும் மாணவர்களாலோ அல்லது வரவுள்ள மாணவர் தேர்தலையொட்டியோ இந்த தாக்குதல் நடந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.
பீகாரில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் வருகிற 29-ந்தேதி மாணவர் அமைப்பு தேர்வு நடத்தப்படும். 30-ந்தேதி அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.இந்தநிலையில் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் பொருளாதார துறை பகுதியில் நூலகத்திற்கு வெளியே நேற்று திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அப்போது இதனை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்த மாணவர்கள் அலறியடித்தபடி தப்பியோடினர். மேலும் இதில் பக்கத்தில் நின்றிருந்த சொகுசு காரின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
அதனை தொடர்ந்து அந்த நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்தன. அப்போது சமஸ்கிருத துறையின் பேராசிரியர் லட்சுமி நாராயணன் என்பவரின் கார் அது என தெரியவந்துள்ளது . மேலும் இந்த சம்பவத்திற்கான பின்னணி பற்றியும், குண்டுவெடிப்புக்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த குண்டுவெடிப்பு பற்றி சிங் கூறும்போது, ஒழுங்கீனத்துடன் நடந்து கொள்ளும் மாணவர்களாலோ அல்லது வரவுள்ள மாணவர் தேர்தலையொட்டியோ இந்த தாக்குதல் நடந்திருக்க கூடும் என கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தடயவியல் அதிகாரிகளும் வந்து குண்டுவெடிப்புக்கு பின்னர் மீதம் கிடைத்தவற்றை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 29-ந்தேதி மாணவர் அமைப்பு தேர்வு நடத்தப்படும். 30-ந்தேதி அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
English Summary
Bomb blast on university campus; Runaway students!