விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - துண்டு காகிதத்தால் பதறிய பயணிகள்.!
bomb threat to londan flight
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்து நேற்று டெல்லி நோக்கி விஸ்தாரா விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்த ஒரு துண்டு காகிதம் விமானத்திற்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி விமான நிலையத்தில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த ஊழியர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். எதுவும் இல்லாததால் தொடர்ந்து டெல்லியை நோக்கி விமானம் இயக்கப்பட்டது.
பின்னர் டெல்லி விமான நிலையத்தில் 290 பயணிகளுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. உடனே விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள், விமானம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
bomb threat to londan flight