15 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வந்த மின்னஞ்சல்: பரபரப்பில் போலீசார்!
Bomb threats sent 15 schools Bengaluru email
பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றியுள்ளனர்.
இன்று அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் வழி மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பு கருதி பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் கடந்த 2022 இல் பெங்களூருவில் பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒரே நேரத்தில் பல மின்னஞ்சல்களை அனுப்பும் செயலி ஒன்றின் உதவியுடன் இந்த மிரட்டல்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
அது போன்ற செயலியின் மூலம் தற்போது இந்த மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Bomb threats sent 15 schools Bengaluru email