டிராக்டரின் கலப்பையில் சிக்கிய சிறுவன்.. துண்டு துண்டாக உடல் சிதறி பலி.! - Seithipunal
Seithipunal


டிராக்டரின் கலப்பையில் சிக்கிய சிறுவன் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி மண்டலம் வேடம் கிராமத்தில் விவசாயியாக இருந்து வருபவர் முனி சந்திரா, இவருக்கு முனிராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேவனாஸ் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார்.

இந்த நிலையில் இவர்களது உறவினர் மகேஷ் தனது நிலத்தில் டிராக்டரில் ரொட்டோவேட்டர் கலப்பையை கொண்டு உழுது கொண்டிருந்தார். அப்போது முனி சந்திரா தனது மகனை தூக்கிக் கொண்டு மகேஷின் நிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு சிறுவன் அழுது கொண்டு அடம் பிடித்ததால் சிறுவனை தூக்கி டிராக்டரில் உட்கார வைத்துள்ளார். 

இந்த நிலையில் மகேஷ் டிராக்டரில் வேகமாக நிலத்தை உழுது கொண்டிருந்த போது சிறுவன் திடீரென தவறி கீழே சேற்றில் விழுந்து உள்ளான். அப்போது சுழலும் ரோட்டோவேட்டர் கலப்பையில் சிக்கிய சிறுவன் 3 துண்டுகளாக சிதறி பலியாகி உள்ளார்.

தந்தையின் கண் முன்னே மகன் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீ காளஹஸ்தி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boy caught in the plow of a tractor and death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->