மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால்!  - Seithipunal
Seithipunal


டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 21 நாள் இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், சற்று முன்பு திகார் சிலைகள் அவர் சரணடைந்துள்ளார்.

சிறைக்கு செல்வதற்கு முன்பு டெல்லி ராஜ்கோட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கும் சென்று, தனது கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றினார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

பின்னர் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கோரி கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 21 நாள் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

தனது ஜாமினை மீண்டும் நீட்டிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் வைத்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், இன்று அவர் திகார் சிறையில் சரணடைந்தார்.

சிறைக்கு செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து கெஜ்ரிவால் தெரிவிக்கையில், இந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே போலியானது. நாங்கள் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Breaking News Delhi CM ArvindKejriwal ThiharJail


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->