உயிரை பறிக்கும் சிக்கன் - 2 பேர் பலி; 10 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக சிக்கன் சாப்பிடுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே செங்கல் சூளையில் பணியாற்றிய பத்துக்கும் மேற்பட்டோர் வாந்தி எடுத்து, மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உடனே அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கோழியில் இருந்து நீக்கப்படும் குடல் போன்ற உறுப்புகளை வாங்கி சமைத்துள்ளனர். இதனால் தான், அவர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died in thiruvallur for eat chicken


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->