சிவகங்கை செல்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
chief minister mk stalin visit mk stalin
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், அங்கு நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். ஏற்கனவே கோவை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவர் கள ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அதன் படி இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் இம்மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியியிலும் அவர் பங்கேற்கிறார் .
English Summary
chief minister mk stalin visit mk stalin