எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் முருகன்! கொண்டாட்டத்தில் திமுக! - Seithipunal
Seithipunal


வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.

ஆனால் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறி ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதனை அடுத்து கட்சியின் கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக செந்தில் முருகனை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றவுடன் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று செந்தில் முருகன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். 

செந்தில் முருகனின் அடுத்தடுத்த நகர்வுகள் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதே சமயத்தில் செந்தில் முருகனின் வருகை திமுக வேட்பாளருக்கு வெற்றிக்கு வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Senthil Murugan join to DMK Erode East election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->