திடீரென இடிந்து விழுந்த பாலம் - தொழிலாளர்களின் நிலை என்ன?
bridge collapse in gujarat solida
கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் திடீரென இடிந்து விழும் சம்பவம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் தற்போது பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுரேந்திரநகர் மாவட்டம் சொலிடா பகுதியில் கனமழை காரணமாக போஹவோ ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சொலிடா நகரையும் ஹபிஹாசிர் நகரையும் இணைக்கும் பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
bridge collapse in gujarat solida