உற்சாகத்தில் பி.எஸ்.என்.எல்!!!! பல ஆண்டுகள் கழித்து முதல் முறையாக லாபம்..... - Seithipunal
Seithipunal


       பாரத சஞ்சார் நிகாம் லிமிடெட் பிஎஸ்என்எல் என்பது இந்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் துறையின்கீழ் செயல்படும் ஒரு இந்திய ஒன்றிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். பிஎஸ்என்எல்,1- அக்டோபர் -2000 யில்  நிறுவப்பட்டது. முதலில் கொடிக் கட்டி பறந்தாலும் அதன் பின்னர் பின்னடைவில் தங்கியது. அதுமட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ வந்ததற்கு பின்பு முற்றிலுமாக பின்னடைந்தது.
   கடந்த 17 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும் தற்போது முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 262 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

                                       
 லாபம் ஈட்டியதன் காரணம் :
     முதல் முறையாக லாபம் ஈட்டியதன் காரணமானது, மலிவான பிளான்களை வைத்து வெகுவாக வாடிக்கையாளர்களைப் பிடித்துதான். மேலும் ரிலையன்ஸ் ஜியோ, சிறிது காலமாக பிளானிங் தொகையை திடீரென ஏற்றியதுதான். ஜியோ மற்றும் மற்ற வாடிக்கையாளராக இருந்த மக்கள் மலிவான விலையில் பிஎஸ்என்எல் பிளான்கள் இருந்ததால் அதற்கு மாறியுள்ளனர்.

 நிதியாண்டின் கணக்கு :
     நடப்பு 2024 -2025 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர் -டிசம்பர் ) நிதிநிலை அறிக்கையை, பொதுத்துறை நிறுவனமான bsnl நேற்று முன்தினம் வெளியிட்டது. இதுகுறித்து ஜோதிராதித்யா சிந்தியா என்ற மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கூறியதாவது, " பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது ஒரு அம்சமான நாள். டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 262 கொடி லாபம் பெற்றுள்ளது. இது இந்நிறுவனத்திற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. மேலும் முதல் முறையாக 17 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை பதிவு செய்துள்ளது.

 லாபத்தின் விரிவாக்கம் :
     பிஎஸ்என்எல் நிறுவனமானது வீடுகளுக்கான பைபர் சேவை பிரிவின் வருவாய் 15%, குத்தகை சேவை வருவாய் 14%, செல்போன் சேவை பிரிவின் வருவாய் 15%  ஆக உயர்ந்துள்ளது. மேலும் மக்களின் சேவையில் அதிகம் கவனம் செலுத்தி வந்த bsnl நிறுவனம் புத்தாக்கம் செலவு குறைப்பு, வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, நெட்வொர்க் விரிவாக்கம் ஆகியவற்றில் மிகத் துல்லியமான கவனத்தை செலுத்தி இருப்பது தெரிகிறது.

கடந்த 2023- 2024 நிதியாண்டில் நான்கு ஆண்டுக்கு முன்பு இருந்த வருவாயை விட இரு மடங்கு ரூ.2100 கோடியாக மாறி உள்ளது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தினர், நடப்பு நிதியா ஆண்டின் இறுதியில் ஒட்டுமொத்த வருவாய் அதிகரிப்புடன் செலவும் கட்டுக்குள் வரவழைப்போம். மேலும் கடந்த ஆண்டு விட இழப்பும் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

                             
     வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு:

    பிஎஸ்என்எல் இப்போது நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 4g சேவையை வழங்கி வருகிறது. நாடு முழுவதும்1 லட்சம் டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு அவற்றில் 25,000 டவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் 60,000 செயல்பாட்டுக்கு வந்துள்ளது.மேலும் வரும் ஜூன் மாத வாக்கில் 1,00,000 டவர்களும் செயல்பாட்டுக்கு வரும் என்று சுட்டிக்காட்டின.
   கடந்த ஜூன் மாதம் 8.4 கோடியாக இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை டிசம்பரில் 9 கோடியாக மேலும் அதிகரித்துள்ளது.
  அதுமட்டுமின்றி  5g சேவையை குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம்  சிந்திக்கும் " எனவும் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BSNL in high spirits Profit for the first time after many years


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->