லிப்ட் கொடுப்பதாக கூறி 6ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை.! - Seithipunal
Seithipunal


லிப்ட்  கொடுப்பதாக கூறி 6ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிம் மாநில தலைநகர் கேங்டாங்கில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கால் டாக்ஸி ஓட்டுனர் லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்து காரில் ஏற்றியுள்ளார்.

அதன் பின்னர் கால் டாக்ஸி ஓட்டுனர் செல்லும் வழியில் மாணவிக்கு தின்பண்டம் மற்றும் ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பிறகு சிறுமியை அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மாணவியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநர் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனிடையே தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

கடந்த 3 நாட்களாக போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மாணவியின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஓட்டுநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Call taxi driver raped killed 11 years old girl in Sikkim


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->