கூகுள் மேப்பை பார்த்து தண்டவாளத்தில் சென்ற கார் - நொடியில் தவிர்க்கப்பட்டு அசம்பாவிதம்.!!
car run in railway track in bihar for watching google map
பீகார் மாநிலத்தில் உள்ள, கோபால் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ் ராய் என்பவர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள, கோரக்பூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். அங்கு மது விருந்து வைக்கப்பட்டது.
அதில் கலந்துகொண்ட ஆதர்ஷ் ராய் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மீண்டும் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அதீத மதுபோதையில் இருந்ததால் ராய்க்கு வீட்டிற்கு எந்த வழியாக செல்வது என்பது தெரியவில்லை.

இதனால், ராய் தனது செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதனை பின்தொடர்ந்து காரை ஓட்டி சென்றார். இதையடுத்து அவரது கார் ரெயில் தண்டவாளத்தில் பாய்ந்து நின்றது. அப்போது அந்த வழியாக வந்த ரெயிலின் ஓட்டுநர் தண்டவாளத்தை ஒட்டி கார் நிற்பதை பார்த்து அவசர கால பிரேகை பயன்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து ரெயில் காருக்கு அருகே 5 மீட்டர் தொலைவில் நின்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் ரெயில் ஓட்டுநர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் ரெயில் 57 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.
English Summary
car run in railway track in bihar for watching google map