எல் 2 எம்புரான் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
L2 Empuraan OTT release date announced
மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில், கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் லூசிபர். இந்த படத்தின் 02-ஆம் பாகமான 'எல் 2: எம்புரான்' கடந்த 27-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வெளியானதில் இருந்து வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் வகுப்புவாத பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து 17 சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப்பட்டது. படத்தின் நேரத்தில் 02 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, வில்லனின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'எல் 2: எம்புரான்' திரைப்படம் 05 நாட்களில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படம் சர்ச்சையில் சிக்கினாலும், வசூலில் அதிவேகமாக ரூ. 250 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற 24-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் 'எல் 2: எம்புரான்'வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
L2 Empuraan OTT release date announced