கொலம்பியா நாட்டுக்கு என்ன ஆச்சு? - சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்ய காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்கா கொலம்பியாவில் 'மஞ்சள் காய்ச்சல்' காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளன.இதையடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு தொடக்கம் முதல் 'மஞ்சள் காய்ச்சல்' நோய் வேகமாக பரவுகிறது. இது அதிவிரைவாக பரவக் காரணம்  'ஏடிஸ்' மற்றும் 'ஹேமகோகஸ்' வகை கொசுக்களால் பரவுகிறது.

வைரஸ் நோய்:

 இது ஒருவகை வைரஸ் நோய் ஆகும். இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்ட 74 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.மேலும் அங்குள்ள டோலிமா பிராந்தியத்தில் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தற்போதைய காலத்தில் பல கொலம்பியர்கள் வெப்பமான பகுதிகளுக்குச் செல்கிறார்கள்.

அங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் அதிகமாகவுள்ளன.இதில்  சுகாதார அமைச்சர் கில்லர்மோ அல்போன்சோ ஜராமில்லோ, அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் இலவசமாக வழங்கப்படும் இந்த தடுப்பூசியைப் மக்கள் செலுத்திக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.இது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Colombia reason declaring health emergency yellow fever


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->