டெல்லியில் இம்மாத இறுதியில் ஜனாதிபதி கையால் அஜித் குமார் 'பத்ம பூஷன் விருது' வாங்கவுள்ளார்..!
Ajith Kumar to receive the Padma Bhushan award from the President in Delhi later this month
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்தியா அரசால் வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான விருதுகளில் இதுவும் ஒன்றாகும். குறித்த விருது பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கௌரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ஆம் தேதி அறிவித்தது. இதில், நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகிய தமிழகத்தை சேர்ந்த 03 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

அத்துடன், மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதியில் டெல்லியில் நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது. விருதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் பெறவுள்ளார்.
பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்ட 19 பேரில் 03 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட 113 பேரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

01. கலைத்துறையில் குருவாயூர் துரை,
02. புரிசை கண்ணப்பா சம்பந்தன்,
03. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி,
04. வேலு ஆசான்,
05. விளையாட்டுத் துறையில் அஸ்வின்,
06. தொழில்துறையில் ஆர்.ஜி.சந்திரமோகன்,
07. கல்வித்துறையில் லட்சுமிபதி ராமசுப்பையர்,
08. சீனி விஸ்வநாதன்,
09. அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் ஏ.டி. ஸ்ரீனிவாஸ்,
10. மற்றவை சமையல் (Others culinary) பிரிவில் தாமோதரன் மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த தட்சணாமூர்த்திக்கு கலைப்பிரிவில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளன.
English Summary
Ajith Kumar to receive the Padma Bhushan award from the President in Delhi later this month