பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீன் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீன் மீது வழக்கு பதிவு.!

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பல்கலைக்கழகத்தில் மருந்து அறிவியல் துறையின் டீன் திரேந்திர கௌசிக் என்பவர் தன்னிடம், "மேற்கத்திய ஆடைகளில் நீங்கள் கவர்ச்சியாக இருப்பீர்கள், உங்கள் கணவர் இல்லாத நேரத்தில் என்னை ஒரு ஓட்டலில் சந்திக்க வாருங்கள்" என்று அநாகரீகமான கருத்துக்களை தெரிவித்ததார். 

தன் உடல் குறித்து அநாகரீகமான முறையில் திரேந்திரா அடிக்கடி கருத்து தெரிவித்தார். இது போன்ற அநாகரீகமான கருத்துக்களை கூறுவதை நிறுத்துமாறு நான் கேட்டுக் கொண்டேன். அதன் பின்னர் அவர் தன்னை குறிவைக்க ஆரம்பித்தார். 

கடந்த ஏப்ரல் 28ம் தேதி தனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு அறைக்குள் தன்னைத் துன்புறுத்தத் தொடங்கினார். இதுகுறித்து வெளியில் சொன்னால் பதவியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று என்னை மிரட்டியுள்ளார் என்றும் பேராசியை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக குருகிராமில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில், பல்கலைக்கழக டீன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against college deen for sexuall harassment in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->