தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு..எந்த வகுப்பினர் அதிகம் தெரியுமா?
Caste census results released in Telangana Do you know which classes are more?
தெலங்கானா மக்கள் தொகையில் மொத்தம் 56.33% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பீகார் மற்றும் காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.தெலங்கானாவில்கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி தொடங்கிய சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் 50 நாட்கள் நடைபெற்றது.
அப்போது தெலுங்கானாவில் 3,54,77,554 பேர் மற்றும் 1,12,15,134 குடும்பங்களிடம் வீடு வீடாகச் சென்று சமூக-பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் புள்ளிவிவரங்கள் மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி தெலங்கானா மக்கள் தொகையில் மொத்தம் 56.33% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களில் முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10.08% பேரும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 46.25% பேரும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தினர் 17.43% பேரும் பழங்குடியினர் 10.45% பேரும் உள்ளனர் என்று சாதி கணக்கெடுப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இதேபோல தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகையில் முற்பட்ட வகுப்பினர் (OC) 13.31% பெரும் முஸ்லிம்களில் முற்பட்ட வகுப்பினர் 2.48% பெரும் உள்ளது என்றும் அம்மாநிலத்தில் மொத்தமாக 50.51% ஆண்கள் மற்றும் 49.45% பெண்கள் உள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
English Summary
Caste census results released in Telangana Do you know which classes are more?