தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததால் கொந்தளிக்கும் கர்நாடக விவசாயிகள்! போலீசார் குவிப்பு!
Cauvery water issue today farmers protest
தமிழகத்துக்கு கர்நாடகா அணையில் இருந்து தண்ணீர் திறக்க கூடாது என கடந்த சில நாட்களாக கர்நாடகா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணை பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் காவிரி ஆற்றில் இறங்கியும் சாலைகளில் டயர்களை எரித்தும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் முடிவு செய்ததால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதனால் கர்நாடகா விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பெங்களூரு காந்திநகர், மைசூர், மாண்டியா, ராம்ராஜ் நகர் உள்பட 5 மாவட்டங்களில் விவசாயிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மைசூர், மாண்டியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு காலை 6 மணி முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் எதுவும் ஓடாததால் மக்கள் கூட்டம் இன்றி நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
முன்னெச்சரிக்கைக்காக மைசூர், கபினி அணை மற்றும் இரு மாநில எல்லையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
Cauvery water issue today farmers protest