#BigBreaking:: ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வரி இல்லை..!! வருமான வரி உச்ச உரம்பில் அதிரடி மாற்றம்..!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

அதன்படி தனிநபர் வருமான வரி உற்ச வரம்பில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தனிநபர் வருமான வரி குறித்து 5 முக்கிய அம்சங்களை அறிவித்துள்ளார்.

அதன்படி தனி நபர் ஒருவர் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை இருந்தால் புதிய வரி முறைப்படி வருமான வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய வரிமுறையில் உள்ளவர்களுக்கு புதிய வருமான வரி ஆண்டு வருமானம் ரூ.2.5 பச்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போன்று ரூ.3- 6 லட்சம் வரை வருமானம் உள்ள தனி நபருக்கு 5% வருமான வரியும், ரூ.6-9 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 10% வருமான வரியும்,ரூ.9-12 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 15%  வருமான வரியும்,  ரூ.12-15 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 20% வருமான வரியும், ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 30 சதவீத வருமான வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central budget annual income upto Rs7 Lakh No Tax


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->