சபரிமலைக்கு அருகில் புதிய விமான நிலையம் - மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி.!
central defense ministry permission to new airport near by sabarimalai
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகைத் தருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்ததாவது:-
"கடந்த 2020 -ம் ஆண்டு சபரிமலை அருகே உள்ள எருமேலி பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு கேரள மாநில தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
அதன் படி, அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அடுத்ததாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
இந்த புதிய விமான நிலையம் அமைப்பதால் 150 கி.மீ. சுற்றளவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்து அதன்படி இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
central defense ministry permission to new airport near by sabarimalai