மத்திய அரசின் "தக்ஷதா பதக் விருது"!...தமிழகத்தைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு அறிவிப்பு!
Central government dakshata pathak award announcement to 7 police officers from tamil nadu
மத்திய அரசால் காவல்துறையினருக்கு வழங்கப்படும் 'கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்' விருதிற்கு தமிழகத்தைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் காவல்துறையினருக்கு 'கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்' விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடய அறிவியல், உளவு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டிற்கான 'கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்' விருதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடய அறிவியல், உளவு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய ஆயுதக்காவல் படையைச் சேர்ந்த மொத்தம் 463 காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி. வந்திதா பாண்டே, காவல் ஆய்வாளர்கள் அம்பிகா மற்றும் உதயகுமார், எஸ்.பி. மீனா, ஏ.எஸ்.பி. கார்த்திகேயன் உட்பட 7 பேர் ' கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Central government dakshata pathak award announcement to 7 police officers from tamil nadu