மாற்று மத பணியாளர்களை நீக்க திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழு தலைவர் முடிவு!
New Board of Trustees of Tirupati Devasthan decided to remove alternative religious workers
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் 24 உறுப்பினர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்ட பி.ஆர். நாயுடு, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி பவன் கல்யாண் மற்றும் மந்திரி லோகேஷ் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதன் பின்னர், நாயுடு கூறுகையில், "அறங்காவலர் குழு தலைவராகப் பணியாற்றுவது எனக்கு பெரும் பாக்கியம். ஆட்சியில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் மிக முக்கியமானவை.
தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்படும். மாற்று மதத்தினரைக் கட்டாய ஓய்வு கொடுக்கவோ அல்லது வேறு பணிக்கு மாற்றவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது" என்றார்.
திருப்பதியில் நேற்று மட்டும் 63,987 பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்தனர். 20,902 பக்தர்கள் முடி காணிக்கையைச் செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ. 2.66 கோடி வசூலானது. இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
English Summary
New Board of Trustees of Tirupati Devasthan decided to remove alternative religious workers