தோல்வி, விஜய் வருகை! மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி!
AIADMK EPS District Secretary meet 2024 nov
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு, அக்கட்சியின் தலைமை கலக்கம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில்,
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை பொதுத்தேர்தல் தோல்விக்குப்பின் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், விஜயின் அரசியல் வருகை ஒரு பக்கம் அணைத்து கட்சிகளையும் சற்று கலக்கமாக்கியுள்ள நிலையில், இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுகவிற்கு முக்கியமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.
English Summary
AIADMK EPS District Secretary meet 2024 nov