சூடானிலிருந்து 2000 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசு தகவல்
Central government informs that 2000 Indians have been rescued from Sudan
சூடானில் ராணுவ படைகளுக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் தலைநகர் கார்ட்டூம் உட்பட முக்கிய நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை படிப்படியாக மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். சுமேதா, ஐ.என்.எஸ். டெக், ஐ.என்.எஸ் தர்காஷ் மற்றும் விமானப்படையின் 2 சி-130 ஜே ரக விமானங்கள் மூலம் நான்கு கட்டமாக இதுவை 2000 வரையிலான இந்தியர்களை மீட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, சூடானில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 1000 பேர் மற்றும் இந்தியர்கள் 3500 வசித்து வருவதாகவும், இதுவரை கிட்டத்தட்ட 2000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மிதமுள்ள இந்தியர்களை மீட்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் இடைவிடாத முயற்சியால் சூடானிலிருந்து இந்தியர்களை மீட்க முடிந்ததாகவும், இதுவரை 600-க்கு மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பிய நிலையில், ஜெட்டாவில் 500 பேரும், சூடான் துறைமுகத்தில் 320 பேர் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Central government informs that 2000 Indians have been rescued from Sudan