சூடானில் இருக்கும் இந்தியர்களை மீட்க பரிசீலினை - மத்திய அரசு தகவல் - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ளனர். 2600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் தலைநகர் கார்ட்டூம் உட்பட பெரும்பாலான இடங்களில் குண்டுவெடிப்புகளும், தாக்குதலும் நடைபெற்று வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து சூடானில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட இந்தியர்களை பாதுகாக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆங்காங்கே கண்காணிப்பு மையங்களை அமைத்து தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் சூடானில் இருக்கும் இந்தியர்களின் நிலைமை பற்றி வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, சூடானில் இந்தியர்களின் பாதுகாப்பில் முழு கவனமும் செலுத்தி வருவதாகவும், சூடானில் நடக்கும் நிகழ்வுகளை குறிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சூடானில் இருக்கும் இந்தியர்களை மீட்க பிற நாடுகளுடன் பேசி வருவதாகவும், இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளரை வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசுவார் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தியர்களை சூடானிலிருந்து அழைத்து வரப்படுவார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியர்களை மீட்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என்றும், அது போர் நிலவரத்தை பொறுத்தது என்றும் பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt says plans are made to rescue Indians in sudan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->