சந்திராயன்-2 உடன் கைகோர்த்த சந்திராயன்-3.!! எகிறும் எதிர்பார்ப்பு.. இஸ்ரோவின் லேட்டஸ்ட் அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவில் தென் துருவம் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் தற்பொழுது நிலவின் சுற்றுப்பாதையில் 25×135 கி.மீ தூரத்தில் நிலவினை சுற்றி வருகிறது.

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி புதன்கிழமை மாலை 5:45 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி துவங்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் சந்திராயன்-2ன் ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவில் உள்ளதால் சந்திராயன்-3 லேண்டர் உடனான தொலைத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன்-2ன் ஆர்பிட்டர் மற்றும் சந்திராயன்-3ன் லேண்டர் இடையே இருவழி தொடர்பு ஏற்பட்டுள்ளதால் நிலவின் தென் துருவத்தில் இப்போது சந்திராயன்-3ன் லேண்டரை தரையிறக்க அதிக வழிகள் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன்-3ன் தகவல் அனைத்தும் மாலை 5:20 மணி முதல் சந்திராயன்-2 ஆர்பிட்டர் மூலம் அனுப்பும் பணி தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ch2 and ch3 two way communication established


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->