பில்கேட்சுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்கவும் திட்டம்!
Chandrababu Naidu meets Bill Gates Meet the heads of various companies as well
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சை நேற்று சந்தித்து பேசினார்.இதுபோல யுனிலீவர், பெட்ரோனாஸ், கூகுள் கிளவுட், பெப்சி மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து வரும் முதலீட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.இந்த மாநாட்டில் ஆந்திர மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்தி வருகிறார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சை நேற்று சந்தித்து பேசினார்.பில்கேட்சுடனான இந்த சந்திப்பைத் தவிர, ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியில் AI மையம் நிறுவுவதற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் நாயுடு செயல்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோல யுனிலீவர், பெட்ரோனாஸ், கூகுள் கிளவுட், பெப்சி மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இந்த முதலீட்டு உச்சி மாநாட்டின் இடையில் பில்கேட்ஸ் சந்தித்த இரு இந்திய தலைவர்களில் ஒருவர் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chandrababu Naidu meets Bill Gates Meet the heads of various companies as well