அதுதான் இல்லை... இதாவது கிடைக்குமா.? பிரதமரிடம் கோரிக்கை வைத்த சந்திரபாபு நாயுடு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசத்திற்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். 

ஆந்திர பிரதேசத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடி தொடர்பாக ஆலோசிப்பதற்காக சந்திரபாபு நாயுடு இன்று காலை டெல்லி சென்றிருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வரிசலுகை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஆந்திராவில் நிதி நெருக்கடியை இதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர்களான பியூஸ் கோயல் மற்றும் நிதின் கட்கரியையும் சந்தித்துள்ளார். 

இது குறித்து தெலுங்கு தேசம் கட்சி அளித்துள்ள தகவலின் படி, கடந்த ஆட்சி ஆன ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் ஆட்சியின்போது மொத்த நிதி பற்றாக்குறை ரூ. 55,817.50 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது 2014-19 வரையிலான தெலுங்கு தேச கட்சி ஆட்சியின் போது இருந்த நிதி பற்றாக்குறையை விட சுமார் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலின் போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி வலியுறுத்தி இருந்தது. 

ஆனால் ஒடிசா மற்றும் பீகாரருக்கு இப்போது சிறப்பு மாநில அந்தஸ்தை கோருவதால் ஆந்திர மாநிலத்திற்கு வரிச்சலுகை கோரலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu request Prime Minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->