ஏர் இந்தியா நிறுவன இயக்குனர் குழுவின் தலைவராக சந்திரசேகரன் நியமணம்.! - Seithipunal
Seithipunal


ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவின் தலைவராக என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து அண்மையில் டாடா குழுமம் வாங்கியது. மத்திய அரசிடம் இருந்த போது ஏர் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கி வந்தது. 

சுமார் 70 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தில், விமானங்களை பராமரிப்பதிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் நிர்வாக ரீதியாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.

இழப்பை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு ஏலம் விட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் அதை வாங்கியது.

டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதன் மூலம் சுமார் 68 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிறுவனம் டாடா கைவசமே மீண்டும் சென்றுள்ளது.

உலகம் முழுவதுமுள்ள விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 1800 இறங்குதளங்களும், 4,400 விமான நிறுத்துமிடங்களும் உள்ளன.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராக, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் என். சந்திரசேகரன் நியமிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrasekhar appointed as chief of Air India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->