சட்டசபைத் தேர்தல் - சத்தீஸ்கரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தில் நாளை மற்றும் 17 ஆம் தேதி என்று இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டமாக இருபது இடங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சிலிண்டருக்கு ரூ.500 மானியம், ஒரு குவிண்டால் நெல் ரூ.3,200-க்கு கொள்முதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கிடையே தேர்தல் நடக்கும் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் என்று அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாளை சட்டசபை தேர்தல் நடைபெறும் சத்தீஷ்காரின் 20 தொகுதிகள் மற்றும் மிசோரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ந்தேதி எண்ணப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chattesgarh assembly election start tomarrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->