பிரக்யானந்தா பெற்ற தோல்வி வெற்றிக்கு இணையானது! குவியும் வாழ்த்து மழை! - Seithipunal
Seithipunal


அஜர்பைஜான்  நாட்டின் தலைநகர் பாக்குவில் நடைபெற்ற உலகக்கோப்பை சதுரங்க வாகையர் போட்டி இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இறுதிப்போட்டியில் சென்னையை சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்யானந்தா, உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நார்வே நாட்டின் மேக்னஸ் கால்சனிடம் மோதினர்.

முதல் இரண்டு சுற்றுகளும் ட்ராவில் முடிந்ததன் காரணமாக, டை-பிரேக்கர் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் ஆட்டம் இன்று நடைபெற்றது.

டை-பிரேக்கரில் இரண்டு சுற்றிலும் போராடி தோல்வியடைந்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இதன் மூலம் FIDE உலகக் கோப்பை 2023 இரண்டாம் இடம் பிடித்தார்.

சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சன் வென்றார்.

இந்நிலையில், உலகக்கோப்பை செஸ் போட்டி தொடரில் இரண்டாம் இடம் பிடித்த சென்னை வீரர் பிரக்யானந்தாவிற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் வாழ்த்துச் செய்தியில், "உலகின் முன்னணி வீரரிடம் 2.5-1.5 என்ற கணக்கில் போராடி பிரக்யானந்தா பெற்ற தோல்வி வெற்றிக்கு இணையானதுதான். 

அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த உலகக் கோப்பை போட்டியில் வாகையர் பட்டத்தை வெல்ல வாழ்த்துகள்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chess World Cup Praggnanandhaa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->