ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் 8 பேர் பாஜகவில் இணைவு! தலைநகரை கைப்பற்றும் பாஜக! - Seithipunal
Seithipunal


கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 8 எம்.எல்.ஏ.-க்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.-க்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் டெல்லி அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

பாவனா கவுர், ரோகித் மெஹ்ரவுலியா, கிரிஷ் சோனி, மதன் லால், ராஜேஷ் ரிஷி, பூபிந்திர் சிங் சூன், நரேஷ் யாதவ், பவன் ஷர்மா இவர்கள் அனைவருக்குமே இந்த முறை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. 

இதனால் அதிருப்தியில் இருந்த நிலையில், இன்று தங்களை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளனர். 

இந்தமுறை டெல்லியை பாஜக கைப்பற்றும் என்று சொல்லப்பட்ட நிலையில், இது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi assembly elections AAP Kejriwal BJP 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->