சூடானில் துணை ராணுவத்தினர் திடீர் தாக்குதல்: 54 பேர் பலி; 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


சூடானின் துணை ராணுவத்தினரின் திடீர் தாக்குதலில் 54 பொதுமக்கள்  உயிரிழந்துள்ளனர்.  150 க்கும் மேற்பற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சூடான் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே  கடும் மோதல் இடம்பெற்று வருகிறது.

குறித்த உள்நாட்டுக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், சூடானின் ஆம்டர்மேன் பகுதியில் உள்ள திறந்தவெளி மார்க்கெட் மீது துணை ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

குறித்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

54 people killed in a sudden attack on a market area in Sudan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->