கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவர முதல்வர் பசவராஜ் பொம்மை தீவிரம்!
Chief Minister Basavaraj bommai to bring general civil law in Karnataka
மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோன்று பாஜக தேர்தல் அறிக்கைகளிலும் இது குறித்தான வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது பாஜக உறுதியாக இருப்பதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக ஆரோக்கியமான வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு அதன் பிறகு சட்டம் இயற்ற வேண்டும் என பாஜக விரும்புவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
மேலும் மத்திய அரசு மதசார்பற்றதாக இருக்கும் போது சட்டங்கள் மட்டும் எவ்வாறு மதம் சார்ந்து இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் அனைத்தும் மதத்தவர்களுக்கும் ஒரே பொது சிவில் சட்டம் தான் இருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை "பொது சிவில் சட்டம் கொண்டு வருவது அகில இந்திய அளவில் பாஜகவின் திட்டம். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் குழு அமைத்துள்ளன. பொது சிவில் சட்டம் அனைவரும் விரும்பக்கூடியது. எனவே பொது சிவில் சட்டம் அமல்படுத்த தேவையான ஆலோசனைகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
English Summary
Chief Minister Basavaraj bommai to bring general civil law in Karnataka