குழந்தை பாக்கியம் இல்லாத ஏக்கம்.. பெண் எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பாறசாலை அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
 
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை கொற்றாமம் பகுதியைச் சேர்ந்த  அனூப் என்பவருடைய  மனைவி சவுமியா.இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது  4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை  குழந்தைகள் இல்லை. இதனால் பல் டாக்டரானசவுமியா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாகவும், லேசான மனநல பாதிப்பும் இருந்ததால் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு அனூப் மற்றும் சவுமியா ஆகியோர் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென படுக்கை அறையில் இருந்த சவுமியா எழுந்து சென்று குளியல் அறையில் கத்தியால் கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முற்பட்டார்.இதையடுத்து பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  சவுமியாவை உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  மீட்டு சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து பாறசாலை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Childless longing A woman s fateful decision


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->