சீன விசா முறைகேடு வழக்கு; கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும்; டெல்லி நீதிமன்றம்..!
Chinese visa fraud case Enforcement Directorate should respond to Karti Chidambaram petition Delhi court
சீனர்களுக்கு பஞ்சாப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
குறித்த வழக்கின் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றில்மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு நீதிபதி ரவீந்தர் துடேஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்து. வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா ஆஜராகி முன் வைத்த வாதங்களைப் நீதிபதி பதிவு செய்து கொண்டார். அத்துடன், சீன விசா முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரும் கார்த்தி சிதம்பரத்தின் மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தர விட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கில் மேலதிக விசாரணையை எதிர்வரும், மே 29-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை குற்றச்சாட்டு பதிவு மீதான வாதங்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Chinese visa fraud case Enforcement Directorate should respond to Karti Chidambaram petition Delhi court